News May 8, 2025
10-வது தேர்ச்சி போதும்… வங்கியில் 500 காலியிடங்கள்!

பேங்க் ஆப் பரோடாவில் 500 பியூன் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் 24 காலியிடங்கள் உள்ளன. 10வது தேர்ச்சி பெற்று, 18- 26 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹19500 – ₹37815 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News November 10, 2025
BREAKING: அதிமுகவில் இணைந்தார்

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மாற்றுக்கட்சியில் இணைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மதிமுக மாநில மாணவர் அணி துணை செயலாளர் சிவநாதன், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு, மல்லை சத்யா மதிமுகவில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது சிவநாதனும் வெளியேறியுள்ளார்.
News November 10, 2025
கமல்ஹாசனின் அடுத்த பட டைரக்டர் இவரா?

ரஜினியுடன் இணையும் படத்திற்கு முன்பாக, ஒரு படத்தில் நடித்து முடிக்க கமல்ஹாசன் முடிவு எடுத்துள்ளாராம். அதன்படி, ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ படங்களை இயக்கிய அருண்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதுதொடர்பாக, சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சண்டை கலைஞர்களான அன்பறிவு இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
News November 10, 2025
பாமக அலுவலகத்தில் குவிந்த போலீஸ்.. பதற்றம்

சென்னை, தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்திற்கு மர்மநபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில், அது புரளி என தெரியவந்தது. அதேபோல், மலேசியாவில் இருந்து சென்னை வந்திருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அதுவும் புரளி என தெரியவந்தது.


