News January 12, 2025
108 ஆம்புலன்சில் பணிபுரிய அரிய வாய்ப்பு

நெல்லை மாவட்டம் கீழ்முன்னீர்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் 108 ஆம்புலன்ஸில் பணி புரிவதற்கு டிரைவர், உதவியாளர் நேர்முகத் தேர்வு நாளை ஜன.13ஆம் தேதி திங்கள்கிழமை நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் 8925941973 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம். நேர்முக தேர்வுக்கு வருகை தரும் அனைவரும் அசல் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். (பயனுள்ளவர்களுக்கு பகிரவும்)
Similar News
News November 19, 2025
பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

கூடங்குளம் அருகே கட்டுமான தொழில் செய்யும் பிரவீன் என்பவரிடம் சத்யாதேவி என்ற பெண் தன்னை சப் கலெக்டர் என கூறி அறிமுகமாகி அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி பிரவீனிடம் 17 பவுன் நகை, 8½ லட்சம் பணம் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் சத்யாதேவி மற்றும் செல்லத்துரை ஆகிய இருவர் கைதான நிலையில் சுரேஷ் என்பவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
News November 18, 2025
நெல்லையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

நெல்லை பாளையில் உள்ள மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகம் மற்றும் மற்றொரு அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.