News April 5, 2024
கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தானது

H5N1 என்ற கொடிய வைரஸ் மனிதர்களுக்கு பரவத் தொடங்கியிருக்கிறது. பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வகை வைரஸ், கொரோனாவை விட 100 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பறவைகள் மற்றும் கால் நடைகளை இதுவரை பாதித்து வந்த H5N1 வைரஸ், முதல் முறையாக அமெரிக்காவில் விவசாயி ஒருவரை தாக்கியுள்ளது. இந்த வைரஸ் அதிக இறப்பு விகிதத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 14, 2026
மாயவரம்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

மாயவரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் parivahansewas.com என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!
News April 14, 2026
SHOCK… 331 குழந்தைகளுக்கு HIV தொற்று

ஒருமுறை பயன்படுத்திய சிரஞ்சை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகள் HIV தொற்றால் பாதிக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் டவுன்ஸாவிலுள்ள THQ ஹாஸ்பிடலில்தான், 2024 நவம்பர் – 2025 அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் தொற்றுகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இக்குற்றச்சாட்டை ஹாஸ்பிடல் நிர்வாகம் மறுத்துள்ளது.
News April 14, 2026
எதேச்சாதிகார போக்கில் பாஜக அரசு: திருச்சி சிவா

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் இதுவரை MP-க்களுக்கு அனுப்பப்படவில்லை என திருச்சி சிவா குற்றஞ்சாட்டியுள்ளார். இது பாஜக தலைமையிலான மத்திய அரசின் எதேச்சாதிகார மனப்பான்மையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது என்றார். முன்னெப்போதும் இல்லாத வகையில் மசோதா விவரங்களை வழங்காதது MP-க்களை ஒரு குழப்பமான மனநிலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் சாடினார்.


