News November 14, 2025

100 இடங்களை தாண்டியது NDA

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி BJP 56, JDU 44, LJP (RV) 3 என மொத்தம் 103 இடங்களில் NDA முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், 60 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்த INDIA கூட்டணி, தற்போது 55 இடங்களாக குறைந்து பின்னடைவை சந்தித்துள்ளது. RJD 38, CONG 12, CPI (ML) 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

Similar News

News December 9, 2025

திண்டுக்கல்லில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

image

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 2026 ஜன.8ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை என அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்யவும். இத SHARE பண்ணுங்க.

News December 9, 2025

2025-ல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய PHOTOS

image

2025-ம் ஆண்டு ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதிர்ச்சி, துக்கம், விரக்தி, பெருமை, நம்பிக்கை, மகிழ்ச்சி என கலவையான எமோஷன்களை ஏற்படுத்திய நிறைய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதில் மிக மிக முக்கியமான சம்பவங்களை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். 2025-ம் ஆண்டை ரீவைண்ட் செய்து பார்க்க அவற்றை SWIPE செய்யுங்கள். உங்கள் மனதை உலுக்கிய சம்பவத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

News December 9, 2025

சற்றுமுன்: விஜய் கூட்டத்தில் அதிரடி கைது

image

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு <<18510199>>துப்பாக்கியுடன் <<>>வந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பொதுக்கூட்டத்திற்கு வந்த சிவகங்கையை சேர்ந்த ஒருவரின் இடுப்பில் துப்பாக்கி இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வந்தநிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!