News August 21, 2024
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 89 பேருக்கு வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அன்று காலை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தனியாக தேர்வு எழுதியவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 18, 2026
குமரியில் அரசு ஊழியர் பரிதாப பலி..!

குருந்தன்கோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). இவர் ஆதி திராவிடர் நலத்துறை இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். தக்கலை தாலுகா அலுவலக குடியிருப்பில் தங்கி இருந்த இருவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தக்கலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 18, 2026
குமரி: டூவீலர் விபத்தில் இளைஞர் பலி..!

தடிகாரன்கோணம் குட்டி பொத்தையை சேர்ந்தவர் ராபின்சன் (26). இவர் மண் எடுக்கும் இயந்திர ஓட்டுநர் ஆவார். இவர் வேலை முடிந்து டூவீலரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது பில்லத்தூர் என்ற இடத்தில் வரும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிந்து விசாரணை.
News January 18, 2026
ரப்பர் சீட் திருடிய நபரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்

அருமனை சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ரப்பர் சீட் திருடுவதாக புகாரி எழுந்தது கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 200 கிலோ ரப்பர் சீட்டுகள் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் திருடு போனது இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று இரவு காரோடு பகுதியில் ரப்பர் சீட் திருடியதாக நபர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


