News May 14, 2024

+1 RESULT: தூத்துக்குடியில் 93.86% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி சென்னை மாவட்டத்தில் மாணவர்கள் 89.97% பேரும், மாணவியர் 97.19% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 93.86% தேர்ச்சி விகிதம் பெற்று தூத்துக்குடி 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

Similar News

News December 14, 2025

தூத்துக்குடி வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News December 14, 2025

தூத்துக்குடி: மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியர் கைது

image

விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் அப்பள்ளியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. எனவே ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து தனிப்படை போலீசார் நேற்று மதுரையில் வைத்து ஆசிரியரை கைது செய்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News December 14, 2025

தூத்துக்குடி: 46 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்.. டிஐஜி உத்தரவு!

image

நெல்லை காவல் சரகம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 46 இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் மாற்றம் செய்து நெல்லை காவல் சரக பொறுப்பு டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார். இதில், தூத்துக்குடி மத்திய பாகம், வடபாகம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், முறப்பநாடு, புதூர், ஆழ்வார்திருநகரி, நாலாட்டின் புதூர் ஆகிய பகுதிகளுக்கு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!