News May 14, 2024

+1 RESULT: சேலம் 91.3% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் 87.56% பேரும், மாணவியர் 94.51 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 91.3% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டம் 19வது இடத்தை பிடித்துள்ளது.

Similar News

News December 9, 2025

சேலம்: பறவைகள் கணக்கெடுப்பு – அழைப்பு!

image

சேலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகங்களில் டிச.27 மற்றும் 28, 2025 ஆகிய தேதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் வனத்துறை, அறிவியல் நிறுவனங்கள். தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு வனச்சரக அலுவலர் 99433-55449 தொடர்பு கொள்ளலாம்.

News December 9, 2025

சேலம்: கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், இளங்கலை மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறதாகவும், தகுதியுள்ள மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 31-12-2025க்குள் http://umis.tn.gov.in/ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News December 9, 2025

சேலத்திற்கு புதிய பெருமை!

image

சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடித்தமைக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் 2025-ம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான காசோலையை வழங்கி வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ள மணிவிழுந்தான் ஊராட்சி இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. (ஏனுங்க நம்ம ஊர் பெருமையை SHARE பண்ணுங்க.)

error: Content is protected !!