News May 14, 2024
+1 RESULT: கரூரில் 92.28% தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி கரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 88.80% பேரும், மாணவியர் 95.33% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.28% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Similar News
News December 15, 2025
குளித்தலையில் மது விற்றவர்கள் அதிரடி கைது!

கரூர்: குளித்தலை கோட்டம் குளித்தலை, நங்கவரம், லாலாபேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, தோகைமலை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் மது விற்பனை செய்துள்ளனர். அங்கு சென்ற போலீசார் மது விற்ற பாப்பாத்தி (64), அய்யர் (55), ஆனந்த் (40), கருப்பசாமி (54), மூர்த்தி(47), பழனிச்சாமி (45), கருப்பன் (35) ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 185 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
News December 15, 2025
கரூர் அருகே விபத்து; பெண் படுகாயம்

கரூர்-அரவக்குறிச்சி சாலையில் பாலகிருஷ்ணன், செல்வி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, லோகேஷ் ஓட்டி வந்த பொலிரோ பிக் அப் வேனுடன் மோதியது. இந்த விபத்தில் செல்வி படுகாயமடைந்து, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அரவக்குறிச்சி போலீசார் சம்பவத்துக்காக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 15, 2025
கரூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

கரூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!


