News November 12, 2025
₹70 கோடி வசூலை வாரி குவித்த ‘பைசன்’

துருவ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியான ‘பைசன்’ படம், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம், 25 நாள்களை கடந்து உலகளவில் ₹70 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக மாரி செல்வராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், லால் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருந்தார்.
Similar News
News November 12, 2025
TVK-ஐ கண்டு திமுக அஞ்சி நடுங்குகிறது: விஜய்

TVK என்ற ‘பக்கா மாஸ்’ கட்சியை பார்த்து, திமுக அஞ்சி நடுங்குவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். அதிகார மமதையில் உள்ள திமுக, TVK-ஐ திட்டுவதையே முழு நேர வேலையாக வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். அறிவு திருவிழா எனக்கூறி, அவதூறு திருவிழா நடத்துவதாகவும் விமர்சித்துள்ளார். கொள்கைகளை மறந்து விட்டு செயல்படும் திமுக, 2026 தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
இந்தியர்களும்.. உலகின் டாப் கம்பெனிகளும்!

இந்தியாவோடு ஒப்பிடும் போது வெளிநாட்டு டெக் கம்பெனிகள் தான் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. ஆனா, அந்த கம்பெனிகளின் ஒட்டுமொத்த அதிகாரமும் இந்தியர்களிடம் தான் உள்ளது. அப்படி எந்தெந்த டாப் கம்பெனிகளின், தலைமை பொறுப்பில் இந்தியர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரு லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும்.
News November 12, 2025
BREAKING: 3 திமுக அமைச்சர்கள் வீட்டில் பரபரப்பு

அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், சேகர்பாபு மற்றும் பாடகி சின்மயி ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி இருக்கிறது. இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பதறிப்போன போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் & மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


