News November 12, 2025
₹10 நாணயம்.. சந்தேகத்துக்கு இதுதான் காரணம்

2017-ல் ₹10 நாணயம் வெளியானது முதலே, இது செல்லுமா செல்லாதா என்ற சர்ச்சை அடிக்கடி எழுகிறது. ஒருசிலர் வாட்ஸ்ஆப்பில் பரப்பிய வதந்தி தான் இதற்கு காரணம் எனப்படுகிறது. மேலும், இதுவரை 14 வெவ்வேறு ₹10 நாணயங்களை RBI வெளியிட்டுள்ளது. இவற்றில் 10 மேடுகள் (ridges) உள்ளது செல்லும் என்றும் 15 மேடுகள் உள்ள நாணயங்கள் செல்லாது என்றும் ஒரு வதந்தி உள்ளது. எதுவும் உண்மையல்ல. அனைத்து ₹10 நாணயங்களும் செல்லும்.
Similar News
News November 12, 2025
சென்னை – விஜயவாடா வந்தே பாரத் நரசபூர் வரை நீட்டிப்பு

சென்னை – விஜயவாடா இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இன்று முதல் நரசபூர் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 5:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில்(20677), ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா வழியாக பிற்பகல் 2:10 மணிக்கு நரசபூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் 2:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில்(20678) இரவு 11:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.
News November 12, 2025
ரிலையன்ஸுடன் இணைந்த நடிகர் அஜித்குமார்

அஜித்குமாரின் ரேஸிங் அணி, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. ரிலையன்ஸின் எனர்ஜி ட்ரிங்க் பிராண்டான CAMPA எனர்ஜி, AK ரேஸிங் அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியாவை உலகளவில் கொண்டு செல்லும் தொலைநோக்குடன் செயல்படும் AK ரேஸிங் அணியுடன் பார்ட்னர்ஷிப் வைப்பது மகிழ்ச்சி என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
News November 12, 2025
பாஜகவுக்கு அதிமுக ஒத்து ஊதுவது ஏன்? எ.வ.வேலு

கூட்டணியின் காரணமாகவே பாஜகவின் செயல்பாடுகளுக்கு அதிமுக ஒத்து ஊதுவதாக எ.வ.வேலு விமர்சித்துள்ளார். சங்கி கொள்கையை EPS தாங்கிப் பிடிக்கும் காரணத்தினால் தான், பிற கட்சிகளில் இருப்பவர்கள் திமுகவிற்கு வருவதாகவும் அவர் பேசியுள்ளார். மேலும், தமிழகத்தில் திராவிட கொள்கையை திமுக மட்டுமே கடைபிடிப்பதாகவும் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.


