News November 12, 2025
ஶ்ரீரங்கம்: லட்சக்கணக்கில் பக்தர்கள் காணிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை என்னும் பணி நேற்று (நவ.11) காலை தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 78 லட்சத்து 2 ஆயிரத்து 585 ரூபாய் ரொக்கப்பணம், 58 கிராம் தங்கம், 994 கிராம் வெள்ளி மற்றும் 301 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெற்றதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
திருச்சி: 100 பேர் அதிரடி கைது!

திருச்சியில் கஞ்சா விற்ற வழக்கில் ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த செல்வி (58), மலைப்பட்டியை சேர்ந்த ரேவதி (60) ஆகியோரை திருவெறும்பூர் மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களது தொடர் குற்ற செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி பரிந்துரையின் பேரில் 2 பேர் மீதும் குண்டர் சட்டம் பதியப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 100 பேர் குண்டாசில் கைது செய்யபட்டுள்ளனர்.
News November 11, 2025
திருச்சி: ரயில்வேயில் வேலை.. ரூ.29,735 சம்பளம்!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK<
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 11, 2025
திருச்சி இளைஞர் கொலை: குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று இரவு ஒருவரை போலீசார் சுட்டுப் பிடித்த நிலையில், தலைமறைவாக இருந்த திருவானைக்காவலை சேர்ந்த நந்தகுமார், ரவுடி பிரபாகரன், கணேஷ் ஆகிய 3 பேர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது தவறி விழுந்ததில், மூவருக்கும் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


