News November 12, 2025

வேலூர் கூடுதல் விலைக்கு மது விற்பனை பெண் கைது

image

வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் மதுபானம் கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக வேலூர் தெற்கு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோதாவரி (45) என்பவர், தனது வீட்டில் மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கோதாவரியை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 12, 2025

போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை

image

வேலூர் மாவட்டம், கடந்த 2021 ஆம் ஆண்டு “போக்சோ” வழக்கில் திருமால் என்பவர் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த வழக்கு நேற்று (11/11/2025) வேலூர் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு திருமால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ. 25,000 அபராதமும் வழங்கப்பட்டது, அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News November 12, 2025

வேலூர்: 3 நாளாக காணாமல் போனவர் சடலமாக மீட்பு

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (40) மூன்று நாட்களாக காணாமல் போயிருந்தார். தொடர்ந்து தேடிய காவல்துறையினர், நேற்று (நவ.11) சர்வே எண் 100 ஏரியில் அவரது சடலத்தை கண்டெடுத்தனர். தீயணைப்பு துறை உதவியுடன் உடல் மீட்கப்பட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

News November 12, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.*

error: Content is protected !!