News November 12, 2025
வேற சார்ஜரில் போனை சார்ஜ் பண்றீங்களா?

வீட்டுக்கு வரும் வோல்டேஜ் சப்ளையை போனுக்கேற்றபடி மாற்றுவது தான் சார்ஜர்களின் வேலை. 67W, 80W, 30W என சார்ஜர்களில் குறிப்பிடப்படுபவை அனைத்தும் அதனுடைய பவரை குறிக்கின்றன. இதனால் அந்தந்த போனுக்கு அதனுடைய சார்ஜரை பயன்படுத்துவது அவசியம். இல்லையென்றால், போனின் பேட்டரி பழுதாகலாம், உள்ளிருக்கும் சர்க்யூட்கள் பழுதாகும், சாப்ட்வேர் பிரச்னைகள் வரலாம் என்கின்றனர். இந்த தவறை செய்யும் அனைவருக்கும், SHARE THIS.
Similar News
News November 12, 2025
டெல்லி குண்டு வெடிப்புக்காக மேலும் 2 கார்கள்

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் டாக்டர் உமர் அகமது, சதி செயலுக்காக மேலும் 2 கார்களை வாங்கியுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 2 கார்களும் எங்கே என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க 10 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
நாம் சுவாசிக்கும் காற்றும்.. மாசும்!

நாட்டில் காற்று மாசுபாடு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியாமல் அரசும் திணறி வருகிறது. இந்த நிலையில்தான், இந்திய நகரங்களில், இன்று காலை 6 மணிக்கு நாட்டில் Air quality index எப்படி இருந்தது என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. எந்த நகரம் மோசமாக இருந்தது என்பதை பார்க்க, மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பாருங்கள்.
News November 12, 2025
₹70 கோடி வசூலை வாரி குவித்த ‘பைசன்’

துருவ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியான ‘பைசன்’ படம், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம், 25 நாள்களை கடந்து உலகளவில் ₹70 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக மாரி செல்வராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், லால் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருந்தார்.


