News November 14, 2025

வெள்ளகோவில் அருகே கார் கவிழ்ந்து விபத்து

image

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கரூர் சாலையில் இன்று அதிகாலை ஸ்ரீராம் நகர் அருகே நாய் குறுக்கே வந்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவர் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .விபத்து குறித்து காவல் துறை விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 14, 2025

திருப்பூர்: சூப்பர் அரசு வேலை நல்ல சம்பளம்! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.16 ஆகும். திருப்பூர் மக்களே இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News November 14, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய தம்பதி: அதிரடி கைது!

image

மூலனூர் பகுதியில் உள்ள கிராம கோவில்களில் உண்டியல் காணிக்கை, பூஜை பொருட்கள், பித்தளை தட்டுகள் திருட்டு போயின. இது தொடர்பாக கேமரா காட்சிகள் ஆய்வு செய்த போது திண்டுக்கல்லை சேர்ந்த பரமேஸ்வரன் (46), மனைவி விஜயலட்சுமி (35) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.

News November 14, 2025

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி: 17 ம் தேதி தொடங்குகிறது

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் குரூப் 2 மற்றும் குருப் 2 ஏ முதன்மை தோ்வுக்கான வகுப்புகள் வருகிற 17ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக அறை எண் 439ல் தொடங்கப்பட உள்ளது.  இதில் கலந்துகொள்ள 0421 2999152 மற்றும் 9499055944 எண்ற எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மனிஷ் கூறினார்.

error: Content is protected !!