News October 7, 2025

விழுப்புரம்: 10th போதும், கிராம உதவியாளர் வேலை!

image

விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துரையின் கீழ் காலியாக 11 கிராம உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.31,100 வரை வழங்கப்படும். 21 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.15-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 14, 2025

விழுப்புரத்தில் வீடு புகுந்து கொள்ளை ; போலீஸ் வலை!

image

விழுப்புரம்: ஆடல் நகர் பகுதியில் பாண்டியன் எனபவர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நுழைந்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்றனர். வீட்டை பூட்டிவிட்டு கடலூரில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த அவர் திரும்பியபோது இது தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 14, 2025

இந்திய அளவில் கலக்கிய விழுப்புரம் காவலர்!

image

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்ட முதல்நிலைக் காவலர் வருண்குமார் கராத்தே பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். கடந்த மாதம் 8 முதல் 16 வரை நடந்த போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டார். சாதனை புரிந்த வருண்குமாரையும், அவரது பயிற்சியாளர் குணசேகரனிடம் எஸ்.பி சரவணன் பாராட்டினார்.

News November 14, 2025

விழுப்புரம்: இனி வீட்டில் இருந்தே லைசன்ஸ் எடுக்கலாம்!

image

விழுப்புரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த<<>> லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!