News October 2, 2025

விழுப்புரம்: டாக்டர் கன்சல்டிங் பீஸ் கட்ட தேவையில்லை

image

108-ஐ போல 104 உதவி எண் இருப்பது பற்றி தெரிவதில்லை. மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்க தான் 104 சேவை உள்ளது. 104 கட்டுப்பாட்டு அறையை மக்கள் தொடர்பு கொள்ளும் போது, அவர்களுக்கென தனி பதிவெண் வழங்கப்பட்டு துறை சார்ந்த மருத்துவர்கள் மூலம் ஆலோசனை (கன்சல்டிங்) வழங்கப்படும். உடல்நலம் மட்டுமின்றி மனநலம் தொடர்பான ஆலோசனைகளும் இதில் பெறலாம். கட்டணம் கிடையாது. ஷேர் பண்ணுங்க

Similar News

News November 14, 2025

மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 72-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடும் வகையில் இன்று (நவ.14) “மினி மாரத்தான்” போட்டியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தி உட்பட பலர் உள்ளனர்.

News November 14, 2025

விழுப்புரம்: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

விழுப்புரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்

News November 14, 2025

விழுப்புரம்: பட்டாவில் பெயர் மாற்றமா..?

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!