News August 29, 2025
விதிமுறை மீறி இயங்கிய 29 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.42,000 அபராதம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் சரகத்தில் நடந்த வாகன தணிக்கையில் முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட விதிமுறைகளை மீறி இயக்கிய 29 ஆம்னி பேருந்துகளுக்கு ரூபாய் 42,000 அபராதமும், வரியாக ரூபாய் 78,000-மும் வசூலிக்கப்பட்டது. பர்மிட் இல்லாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 12, 2025
சேலத்தில் 89 பேர் அதிரடி கைது!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை ஆந்திரா மாநில அரசு தருவதை போல உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாற்றும் மறியலில் ஈடுபட்ட 89 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
News November 11, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.11) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 11, 2025
சேலம்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


