News November 29, 2025

விஜய்யின் அடுத்த அதிரடி.. இபிஎஸ் அதிருப்தி

image

செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை அடுத்து, விஜய் அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளார். ஒவ்வொரு மண்டலத்திலும் அதிமுகவின் முக்கிய முகமாக இருக்கும் தலைவர்களை, தவெக பக்கம் இழுப்பதற்கு செங்கோட்டையனிடம் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே, மேலும் <<18418910>>பல முன்னாள் அமைச்சர்கள்<<>> தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் இந்த மூவ், இபிஎஸ் தரப்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாம்.

Similar News

News December 2, 2025

வேலூர்: பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

வேலூர் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. 1. இங்கு <>க்ளிக்<<>> செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும். 2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க. 3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

News December 2, 2025

பாமகவை மீட்க குழு அமைத்தார் ராமதாஸ்

image

அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று ECI கூறிவிட்டது. இந்நிலையில், அன்புமணி வசம் சென்ற பாமகவை மீட்பதற்காக ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். நீதிமன்றங்களில் சட்ட போராட்டங்களை நடத்தும் பணியை இக்குழு மேற்கொள்ளும் எனக் கூறிய ராமதாஸ், கட்சித் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்; கட்சி மற்றும் தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News December 2, 2025

‘Word of the Year’ இது தான்!

image

2025-ம் ஆண்டின் ’Word of the Year’ ஆக ‘Rage bait’ என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது. aura farming, biohack உள்ளிட்ட வார்த்தைகளும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இறுதியாக, பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் Rage bait தேர்வு செய்யப்பட்டுள்ளது. வியூஸ்களை அதிகரிக்க கோபம், வெறுப்பை தூண்டும் வகையில் உருவாக்கப்படும் SM கன்டென்ட் Rage bait எனப்படுகிறது.

error: Content is protected !!