News December 7, 2025

வத்திராயிருப்பு அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்

image

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்.அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்,ஆத்தடியான் இவர்கள் அனைவரும் இருளப்பன் என்பவரிடம் கான்ட்ராக் வேலை பார்த்து வருகின்றனர். இதனையடுத்து,அந்தப் பகுதிக்கு வந்த இருளப்பனிடம் சம்பளம் கேட்டுள்ளனர்.இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு குணசேகரனை இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.வத்திராயிருப்பு போலீசார் ஆனந்த், ஆத்தடியான் இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை.

Similar News

News December 7, 2025

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை கடித்து குதறிய நாய்கள்

image

காரியாபட்டியில் நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் மாலை வீடு திரும்ப மந்திரி ஓடை பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தனர். அப்போது, அங்கு சுற்றி திரிந்த நாய்கள் 4 மாணவிகள், பெரியவர் ஒருவரை கடித்தது. அதே போல் ஆவியூர், டி.வேப்பங்குளம், வக்கணாங்குண்டு கிராமங்களில் 5க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்தன. காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். நாய்களை அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை வைகின்றனர்.

News December 7, 2025

விருதுநகர் அருகே பெண் தற்கொலை

image

திருத்தங்கல்-பள்ளப்பட்டி ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். சுப்புலட்சுமி தம்பதி (வயது 55). மாரியப்பன் குடிப்பழகத்தால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.சம்பவதன்று மாரியப்பன் குடித்துவர சுப்புலட்சுமி வீட்டிலிருந்த மாத்திரை எடுத்து தண்ணீரில் கரைத்து குடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

News December 7, 2025

விருதுநகர்: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

image

விருதுநகர் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்

1.<>இங்கே கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!