News November 2, 2025
லெனின் பொன்மொழிகள்

*நாத்திகம் என்பது பொதுவுடைமையின் இயல்பான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும்.
*பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை.
*நம்பிக்கை நல்லதுதான், ஆனால் கட்டுப்பாடு சிறந்தது.
*அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய்க்கூட உண்மையாகிவிடுகிறது.
*பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.
*அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது.
Similar News
News November 2, 2025
குழந்தைகள் புத்தகம் வாசிப்பது ஏன் அவசியம்?

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட மொபைலில் தான் மூழ்கியுள்ளனர். ஏன், பெற்றோர்களே போனை கையில் கொடுக்கின்றனர். அது ஆபத்து எனக்கூறும் டாக்டர்கள், குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பதை கற்று கொடுக்க சொல்கின்றனர். புத்தகம் வாசித்தால் கவனச்சிதறல் குறையும், மன அழுத்தம் குறையும், நினைவாற்றல் அதிகரிக்கும், அறிவாற்றல் மேம்படும், சிந்தனை திறன் வலுவாகும், சொல்வளம் பெருகும் என அறிவுறுத்துகின்றனர்.
News November 2, 2025
அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த பாமக, தவெக!

CM ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை PMK, TVK புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SIR விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் 10 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தை ஏற்கெனவே TMC, AMMK, NTK உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதேநேரம், திமுக கூட்டணியில் இல்லாத DMDK சார்பில், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி பங்கேற்கிறார்.
News November 2, 2025
Opinion poll: பிஹாரில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள்

பிஹார் தேர்தலில் எந்தெந்த கட்சி, எவ்வளவு தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற <<18175298>>கருத்துக்கணிப்பு <<>>வெளியாகியுள்ளது. அதன்படி NDA கூட்டணியில் BJP 70-81, JD(U) 42-48, LJP (RV) 5-7, HAM(S) 2, RLM 1-2 இடங்களிலும், மகாகட்பந்தன் (MGB) கூட்டணியில், RJD 69-78, Congress 9-17, CPI (ML) 12-14, CPI 1, CPM 1-2 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது. அதேபோல் AIMIM, BSP உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து 8-10 இடங்கள் வரை பெறலாம்.


