News November 2, 2025

ராணிப்பேட்டை: இரயில்வே வேலை,ரூ.30 ஆயிரம் சம்பளம்!

image

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் (ஐ.ஆர்.சி.டி.சி.,) காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளது. விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு,கல்வித்தகுதி பி.எஸ்சி.,/ பி.பி.ஏ.,/ எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெறுகின்றது.

Similar News

News November 2, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.2) இரவு 10 மணி முதல் நாளை (நவ.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

ராணிப்பேட்டை: இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

image

ராணிப்பேட்டை மாவட்ட போலீசார், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட இருவரை, இன்று (நவ.2) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் கோபி (25) மற்றும் நிவாஸ் (24) மீது மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

News November 2, 2025

ராணிப்பேட்டை: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!