News November 1, 2025

ராணிப்பேட்டைக்கு துனை முதலவர் வருகை!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், தமிழக துணை முதல்வர் உதயநிதி வரவையுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மூர் அடுத்த சமத்துவபுரத்தில், அமைக்கப்பட்டுவரும் விழா பந்தல் மற்றும் ஏற்படிகளை இன்று (நவ.01) அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார். பின் ஆற்காடு MLA ஈஸ்வரப்பன மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் உடன் இருந்து ஆய்வு செய்த்தனர்.

Similar News

News November 1, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.1) இரவு 10 மணி முதல் நாளை (நவ.2) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 1, 2025

ராணிப்பேட்டையில் மராத்தான் போட்டி!

image

வாலாஜாவில் இன்று (நவ.1) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சார்பாக ஃபிட் இந்தியா ஃபிரீடம் ரன் மினி மரத்தான் 6.0 அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் தனியார் பயிற்சி மையம் மாணவர்கள் மற்றும் கேலோ இந்தியா பயிற்சி மையம் மாணவர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் கலந்து கொண்டார்.

News November 1, 2025

ராணிப்பேட்டையில் ‘தாயுமானவர் திட்டம்’ – ஆட்சியர் அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் உள்ள 36,810 குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் எடுத்து சென்று வழங்கப்படுகிறது. அதன்படி இந்த மாதத்தில் வருகிற 3,4-ந் தேதிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது என ஆட்சியார் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!