News December 3, 2025

மார்த்தாண்டம் சந்தையில் ஒருவர் சடலமாக மீட்பு

image

நல்லூர் பாறைவிளையைச் சேர்ந்த, திருமணம் ஆகாத காய்கறி வியாபாரி பீட்டர் (35), குடிபழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று டிச.2ம் தேதி இரவு மார்த்தாண்டம் காய்கறி சந்தையில் மரணமடைந்த நிலையில் கிடந்தார். தகவல் பெற்ற மார்த்தாண்டம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

குமரி: ஆயுதப்படை வளாகத்தில் முதிர்ந்த மரங்களை அகற்ற ஏலம்

image

குமரி காவல்துறை இன்று 06.12.2025 வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இடையூறாக மற்றும் முதிர்வுற்ற 19 மரங்களை வெட்டி அகற்ற நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் டிசம்பர் 10ம் தேதி காலை 9 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள ரூ.1000 கட்டி பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 6, 2025

குமரி: பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்

image

நாகர்கோவில் அருள்மிகு தழுவிய மகாதேவர் ஆலய தெப்பக்குளத்தை சீர் செய்ய நிதி இல்லை என காரணம் கூறிய அறநிலைய துறையை கண்டித்து நாகர்கோவில் வடக்கு மண்டல பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் கோவில் வளாகத்தில் இன்று (டிச-6) நடைபெற்றது. வடக்கு மண்டல பாஜக தலைவர் சுனில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News December 6, 2025

குமரி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

குமரி மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE

error: Content is protected !!