News November 12, 2025
மாணவர்களை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? சீமான்

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025-ஐ தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டத்திருத்தத்தினால், கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தும் பட்சத்தில், ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் என்று X-ல் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ஏழை எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா என்றும் சீமான் சாடியுள்ளார்.
Similar News
News November 12, 2025
டெல்லி கார் வெடிப்பு: PM மோடி அவசர ஆலோசனை

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக PM மோடி தலைமையிலான அவசர அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு, கார் வெடிப்பு வழக்கின் விசாரணை நிலை குறித்து PM மோடி கேட்டறிந்தார்.
News November 12, 2025
V-ல் ஆரம்பமாகும் அழகிய நகரங்கள்

இந்தியாவில் பல அழகிய நகரங்கள் உள்ளன. அதில், தனக்கென ஒரு கதை, தனித்துவமான அழகு மற்றும் கலாச்சார வசீகரத்தைக் கொண்டுள்ள சில நகரங்களின் பெயர்கள் ‘V’ என்ற எழுத்தில் தொடங்குகின்றன. அவை என்னென்ன நகரங்கள் என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த நகரம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 12, 2025
கவர்னர் மாளிகை தாக்குதல்: 10 ஆண்டுகள் சிறை

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த பூந்தமல்லி NIA கோர்ட், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ₹5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.


