News November 12, 2025

மயிலாடுதுறை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<> இங்கே கிளிக் <<>>செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்களால் ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள முடியும்! ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 12, 2025

மயிலாடுதுறை: ரேஷன் கடையில் பிரச்சனையா?

image

மயிலாடுதுறை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ரயில் நிலைய தண்டவாள பகுதியில் கடந்த அக.20-ம் தேதி ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட சுமார் இரண்டு மாத பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சிறப்பு தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோர் உரிய ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News November 12, 2025

மயிலாடுதுறை: பிரபல கோயிலில் திருட்டு

image

கொள்ளிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புலீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் கோயில் அர்ச்சகர் கோவிலை திறந்த போது கோயில் கருவறை முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருட்டுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகன் சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் உண்டியலை உடைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!