News November 14, 2025
பெரம்பலூர்: தொழில்நுட்பப் பணிகளுக்கான போட்டித் தேர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கணினி வழிப் போட்டித் தேர்வு, வருகிற நவ.16ம் தேதி நடைபெறும் என்று ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வானது, ரோவர் பொறியியல் கல்லூரி, சிறுவாச்சூரில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெறும் என்றும் தேர்வு எழுதவிருப்போர், தேர்வுக்கான அறிவுறுத்தல்களைக் கவனமாகப் பின்பற்றுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
பெரம்பலூர்: வரலாற்று சிறப்பு மிக்க இடம் பற்றி தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று கல்லாக மாறியிருக்கிறது. 1940ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ள இதை உடனே ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
பெரம்பலூர்: B.E போதும்.. இஸ்ரோவில் வேலை ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
பெரம்பலூர்: இவ்வளவு பழமையான இடங்களா?

பெரம்பலூர் மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் இருந்த்தாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க அங்குள்ள பழமையான இடங்களை நாம் காண்போம்
1. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
2.இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
3. கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
4. பாலதண்டபாணி கோயில் – 800 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


