News November 12, 2025
பெரம்பலூர்: காவல் அலுவலகத்தில் ஐ.ஜி நேரில் ஆய்வு

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜோஷி நிர்மல் குமார், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், தனிப்பிரிவு, குற்ற ஆவணக்கூடம் உள்ளிட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பதிவேடுகளைச் சரிபார்த்தார். ஆய்வின்போது, பணியை மேம்படுத்துவது குறித்து காவலர்களுக்கும் அலுவலர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 12, 2025
பெரம்பலூர்: VAO லஞ்சம் கேட்டால் இத செய்ங்க

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 12, 2025
பெரம்பலூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். இங்கே <
News November 12, 2025
பெரம்பலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <


