News November 12, 2025
பென்குயின் காஜல் அகர்வால் PHOTOS

தமிழ்-தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவரது கொய்யும் கண்கள் மற்றும் கலக்கலான ஸ்கிரீன்‑பிரெசென்ஸுக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர், இன்ஸ்டாவில் ஆனந்தமாய் ஆடும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மனதில் மெல்லிய பூகம்பத்தை ஏற்படுத்தும் புகைப்படங்களாக உள்ளன. உங்களுக்கும், போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
Similar News
News November 12, 2025
பாஜகவின் திருட்டுத்தனம்: செந்தில் பாலாஜி

TN மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவுக்கு அதிமுக துணை போவதாக செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். வருமான வரித் துறை, ED, CBI மூலமாக பாஜக அரசு தேர்தலில் வெற்றி பெற நினைத்து தோல்வியடைந்தது எனவும், அதனால்தான் SIR மூலமாக திருட்டுத்தனமாக வெற்றிபெற நினைக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும், பிஹாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கியதை போல, TN-யிலும் நீக்க முயற்சிக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.
News November 12, 2025
அனைத்து ஆண்களுக்கும் மாதம் ₹1,000? CLARITY

தமிழகத்தில் ஆண்களுக்கு மாதந்தோறும் அரசு ₹1,000 வழங்குவதாக கூறி, குறிப்பிட்ட APP-ஐ டவுன்லோடு செய்ய சொல்லி செய்திகள், காணொலிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால், இது முற்றிலும் வதந்தி என அரசின் TN Fact Check மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தில், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மாதம் ₹1,000 வழங்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
News November 12, 2025
பாபர் அசாமின் மிக மோசமான சாதனை!

பாகிஸ்தான் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் மிக மோசமான சாதனை பட்டியலில் வேகமாக முன்னேறி வருகிறார். சதம் அடிக்காமல் தொடர்ச்சியாக அதிக ODI போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் அவர் விராட் கோலியுடன்(83 போட்டிகள்) 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பட்டியலில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா (88) முதல் இடத்தில் இருக்கிறார். ஜெயசூர்யாவின் ரெக்கார்டை முந்துவாரா பாபர்?


