News November 2, 2025
புதுவை: சுற்றுலா வந்தவருக்கு நேர்ந்த சோகம்!

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சராயு பாண்டூரங் ஹாண்டே. இவர் தனது உறவினர்கள் 20 பேருடன் புதுவைக்கு அக்.31 அன்று சுற்றுலா வந்துள்ளார். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மறைமலையடிகள் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தபோது ஹண்டேவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 2, 2025
புதுச்சேரி: ரூ.56,900 சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசு சுங்கத் துறையில் காலியாக உள்ள 22 கேண்டீன் உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 10th போதுமானது. சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.11.2025 தேதிக்குள்<
News November 2, 2025
புதுச்சேரி பாண்டி மெரினாவில் வாலிபர் கொலை

புதுச்சேரியில் சமீப காலங்களாக கொலைவெறி தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் பாண்டி மெரினா விற்கு செல்லும் வழியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அறிந்த புதுச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
News November 2, 2025
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோா், ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளா்களுக்கும், இ- ரிக்ஷா, ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் தனித்தனியே செயலிகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு மற்றும் இ- ரிக்ஷா ஓட்டுநரும் நம்ம ஊரு டாக்ஸி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


