News November 12, 2025

புதுவை: சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் சிறை

image

காரைக்கால் மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது குற்றமாகும். அதனை மீறி சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ரூ.25,000 அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று காரைக்கால் மாவட்டம் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News November 12, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

“தனியார் நிருவனத்தின் பெயரில், வணிக அரசின் உதவி திட்டத்தில் சேர்ந்து பயனடையுங்கள் என்ற பெயரில் போலி லிங்க் ஒன்று பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவிட்டால், உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மர்ம நபர்கள் மோசடியாக எடுத்து ஏமாற்றி விடுகின்றனர். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News November 12, 2025

புதுவை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

image

புதுவை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். இங்கே <>கிளிக்<<>> செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்களால் ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள முடியும்! ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

புதுவை: ஹோட்டல் உரிமையாளருக்கு கத்தி வெட்டு!

image

வில்லியனுாரைச் சேர்ந்தவர் சத்யபிரகாஷ், அவரது வீட்டின் தரை தளத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சத்தியபிரகாஷ் மற்றும் ஓட்டலில் வேலை செய்யும் அமர்குமார் ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் கத்தியால் அமர்குமாரை வெட்டியுள்ளார். அதனையடுத்து சத்யபிரகாஷையும் வெட்டிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றதாக வில்லியனூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!