News November 2, 2025
புதுச்சேரி வரலாற்று புகைப்பட கண்காட்சி

புதுவை யூனியன் பிரதேச வரலாற்றை விளக்கும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் 2 நாள் புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது. கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டடத்தில் இக்கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், மாணவர்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.சபாநாயகர் செல்வம் துணை சபாநாயகர் ராஜவேல் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News November 2, 2025
புதுச்சேரி: ரூ.56,900 சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசு சுங்கத் துறையில் காலியாக உள்ள 22 கேண்டீன் உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 10th போதுமானது. சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.11.2025 தேதிக்குள்<
News November 2, 2025
புதுச்சேரி பாண்டி மெரினாவில் வாலிபர் கொலை

புதுச்சேரியில் சமீப காலங்களாக கொலைவெறி தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் பாண்டி மெரினா விற்கு செல்லும் வழியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அறிந்த புதுச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
News November 2, 2025
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோா், ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளா்களுக்கும், இ- ரிக்ஷா, ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் தனித்தனியே செயலிகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு மற்றும் இ- ரிக்ஷா ஓட்டுநரும் நம்ம ஊரு டாக்ஸி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


