News December 1, 2025
புதுச்சேரியில் சராசரியை விட அதிகம் கொட்டித் தீர்த்த மழை!

புதுச்சேரியில் டிட்வா புயல் பாதிப்புகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார். பின்னர் அதுகுறித்து அவர் கூறுகையில், புதுச்சேரியின் சராசரி மழையளவு 1,355 மி.மீ., இதுவரை 1,455 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியை காட்டிலும் 10 செ.மீ., மழை கூடுதலாக பெய்துள்ளது. கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக அனைத்து படுகையணைகளும் நிரம்பிவிட்டதாக தெரிவித்தார்.
Similar News
News December 2, 2025
புதுச்சேரி: படகு சவாரி மீண்டும் திறப்பு!

புயல் எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து, புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் படகு குழாம் கடந்த 3 நாட்களாக படகுகள் இயக்காமல் இருந்தன. இந்நிலையில், மழை குறைந்ததை தொடர்ந்து, படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சிற்கு நேற்று படகுகள் இயக்கப்பட்டன. ஆனால், குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
News December 2, 2025
புதுச்சேரி: ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட்!

புதுச்சேரி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த ஆதார் <
News December 2, 2025
புதுச்சேரி: மழையால் இடிந்து விழுந்த பள்ளி சுவர்

புதுச்சேரி அரியாங்குப்பம் புறவழிச்சாலை, சிக்னல் அருகில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. டிட்வா புயலால் பெய்த மழையால், நேற்று சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின், 10 அடி உயர மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது, சுவர் பக்க த்தில் இருந்த, ஜூஸ், டிபன், சிக்கன் கடைகள் உட்பட 5 சாலையோர கடைகள் மீது சுவர் விழுந்ததில் கடைகள் முற்றிலும் சேதமடைந்தன.


