News November 2, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.01) இரவு 10 மணி முதல் இன்று (நவ.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News November 2, 2025

புதுகை: பைக்கில் இருந்து தவறி விழுந்த நபர் படுகாயம்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த குப்பக்குடியிலிருந்து தவள பள்ளத்திற்கு மரிய சூசை(52) என்பவர் நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அரசடி பட்டி கிளை சாலையில் பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவர், ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மகன் அளித்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2025

புதுக்கோட்டை: சரக்கு வானகத்தில் சென்றவர் பலி

image

மணப்பாறையை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவர், தவுடு அரைப்பதற்காக நெல் கருக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனத்தில் மூட்டைகள் மேல் படுத்தபடி சென்றுள்ளார். அப்போது மாத்தூர் பஞ்சப்பூர் வந்த போது அவர் வாகன்னத்தில் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளர். அக்கம் பக்கத்தினர்மீட்டு அவரை திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 1, 2025

புதுக்கோட்டை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!