News November 2, 2025
புதுகை: பைக்கில் இருந்து தவறி விழுந்த நபர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த குப்பக்குடியிலிருந்து தவள பள்ளத்திற்கு மரிய சூசை(52) என்பவர் நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அரசடி பட்டி கிளை சாலையில் பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவர், ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மகன் அளித்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 2, 2025
புதுகை: பட்டாகத்தியுடன் மக்களை மிரட்டிய இளைஞர்கள் கைது

ஆலங்குடி அருகே பாத்தம்பட்டி பஸ் நிறுத்தம் பள்ளத்தை விடுதியை சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் அரிமளம் விளக்கு ரோடு செமகோட்டை பகுதியை சேர்ந்த வீர கணேஷ் ஆகிய இருவரும் பட்டக்கத்தியை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். இந்நிலையில் அவ்வழியே ரோந்து வந்த ஆலங்குடி போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
News November 2, 2025
புதுக்கோட்டை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுக்கோட்டை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News November 2, 2025
புதுக்கோட்டை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <


