News November 14, 2025
பிஹாரின் சீமாஞ்சல் பகுதியின் நிலவரம் என்ன?

அராரியா, பூர்ணியா, கதிஹார், கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 24 தொகுதிகள் ‘சீமாஞ்சல்’ பகுதி என கூறப்படுகிறது. இப்பகுதியில் இஸ்லாமியர் வாக்குகள் அதிகம். இந்த வாக்குகளை பிரிக்கவே ஓவைசியின் கட்சி, MGB உடன் சேரவில்லை என கூறப்படுகிறது. 2020 தேர்தலில், இப்பகுதியில் NDA – 12, MGB – 7, ஓவைசியின் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றன. இம்முறையும் அங்கு NDA கூட்டணியே (10+) முன்னிலையில் உள்ளது.
Similar News
News November 14, 2025
தலைகீழாக மாற்றம்… அடுத்தடுத்து ட்விஸ்ட்

பிஹாரில் 2020-ஐ ஒப்பிடுகையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் நிலை தலைகீழ் சரிவை கண்டுள்ளது. ஆரம்பத்தில் கடும்போட்டி நிலவிய நிலையில், 9 மணிக்கு மேல் NDA கூட்டணியின் முன்னிலை ஜெட் வேகத்தில் எகிறியது. தற்போது NDA கூட்டணி 196 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், MGB கூட்டணி வெறும் 39 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதில் தனித்து BJP -89, JDU – 79 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
News November 14, 2025
நேருவின் பிறந்தநாளில் சறுக்கிய காங்கிரஸ்!

சுதந்திர இந்தியாவின் பெரும் அரசியல் ஆளுமையான இந்தியாவின் முதல் PM நேருவின் பிறந்தநாள் இன்று. ஆனால், அவரின் பெருமைகளை நினைவுகூரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இல்லை. இன்று வெளியாகி வரும் பிஹார் தேர்தல் முடிவில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் MGB கூட்டணி 39 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது, காங்., 4 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. நேரு பிறந்தநாள், அவருடைய கட்சிக்கு சோக நாளாக மாறியுள்ளது!
News November 14, 2025
பிஹார் வெற்றி WB-லிலும் தொடரும்: கிரிராஜ் சிங்

பிஹாரில் NDA கூட்டணி 191 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், இந்த வெற்றி பாஜகவுக்கே உரியது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். இந்த வெற்றி, தற்போது அராஜக ஆட்சி நடைபெறும் மே.வங்கத்திலும் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். CM மம்தா பானர்ஜி தலைமையிலான TMC ஆட்சி நடைபெறும் அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.


