News November 12, 2025
பிரபல நடிகர் ஹோமயூன் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஹோமயூன் எர்ஷாதி(78) உடல் நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடுமையாக போராடி வந்த அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஈரானை சேர்ந்த அவர், உலகம் முழுவதும் பிரபலமான தி கைட் ரன்னர், அகோரா, ஜீரோ டார்க் தேர்ட்டி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து அசத்தியவர். இந்தியா உள்ளிட்ட உலக சினிமா பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
₹10 ரூபாய் காயின் செல்லாதா? CLARITY

விஷமிகள் சிலர் பரப்பிய வதந்தியால், நாட்டின் பல இடங்களில் இன்றும் கூட ₹10 ரூபாய் நாணயங்களை மக்கள் வாங்க தயங்குகின்றனர். ஆனால், தயக்கம் வேண்டாம். ₹10 நாணயம் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கது. அதை வாங்க மறுப்பது சட்டவிரோதமானது என்று RBI ஏற்கெனவே தெளிவுப்படுத்தி உள்ளது. யாராவது வாங்க மறுத்தால் 14440 எண்ணில் அழைத்தும் புகார் அளிக்கலாம். இதை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 12, 2025
ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வாரணாசி செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இண்டிகோ விமான நிறுவனத்துக்கும் ஒரே நேரத்தில் சென்னை உள்பட 5 விமான நிலையங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
டிச.5-ல் இந்தியா வரும் புடின்!

Russia-India Forum-ல் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபர் புடின் டிச.5-ம் தேதி இந்தியா வருகிறார். உக்ரைன் போர் தொடங்கிய பிறகு புடின் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துவிட்டதாக USA அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் இதுபற்றி இந்தியா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், புடின் இந்தியா வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


