News November 1, 2025
பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேறியது இவர்தான்

பிக்பாஸ் 9-வது சீசன் தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பிரவீன் காந்தி, அப்சரா சிஜே, ஆதிரை எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வார எலிமினேட் பட்டியலில் கானா வினோத், கம்ருதீன், அரோரா சின்கிளேர், விஜே பார்வதி, கலையரசன் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், குறைவான வாக்குகள் பெற்று கலையரசன் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 2, 2025
நடிகை அர்ச்சனா தற்கொலையா? CLARITY

பிரபல தொகுப்பாளரும், நடிகையுமான VJ அர்ச்சனா, தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தற்கொலை செய்து கொண்டதாக ஒருவர் யூடியூபில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பியுள்ளார். இதை பார்த்து கடுப்பான அர்ச்சனா, அந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், டேய்! புருஷன் கூடச் சண்டை போட்டுத் தற்கொலை… நோ சான்ஸ்! அவரை நான்தான் அடிப்பேன் என்று அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார்.
News November 2, 2025
SIR-ஆல் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல்: CM ஸ்டாலின்

SIR குறித்த அனைத்து கட்சி கூட்டம் CM ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதில் பேசிய CM, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக கடமையாற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடப்பதாக தெரிவித்தார். ஏப்ரலில் தேர்தலை வைத்துகொண்டு தற்போது SIR பணிகளை செய்வது சரியானது அல்ல எனவும், இதனால் வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.
News November 2, 2025
கலர் கலரா ரோஜாக்கள்… அதோட பெயர்கள் தெரியுமா?

பூக்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் ரோஜாக்கள் என்றால் கேட்க வேண்டுமா. எல்லாரும் விரும்பும் ரோஜாக்களை பல்வேறு நிறங்களில் நாம் பார்த்திருப்போம். அதில் பல இயற்கையானது. சில கலப்பின வகைகளை சேர்ந்தது. அப்படிப்பட்ட கலர் கலரான ரோஜாக்களின் பெயர்கள் என்னென்ன, எந்த வகையை சேர்ந்தது என்று தெரியுமா? அதை தெரிந்து கொள்ள மேல SWIPE பண்ணி பாருங்க…


