News November 2, 2025
பழைய கூகுள் குரோம் யூஸ் பண்றீங்களா? WARNING

கூகுள் குரோம் பழைய வெர்ஷன் பிரவுசர் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல என்று மத்திய அரசின் CERT-In எச்சரித்துள்ளது. பழைய வெர்ஷனில் தீவிர பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதால், பயனர்களின் தகவல் திருடுபோக வாய்ப்புள்ளது. ஆகவே 142.0.7444.59/60 வெர்ஷனைவிட பழைய வெர்ஷன் பயன்படுத்தும் Linux, Windows, மற்றும் mac OS-கள் பயன்படுத்துவோர், உடனே அப்டேட் செய்துகொள்ளவும்.
Similar News
News November 2, 2025
என்ன சொல்றீங்க.. இறந்துடுமா?

சில உயிரினங்கள் வாழ்நாள் மிகவும் குறுகிய காலம் மட்டுமே. குறிப்பாக சில பூச்சி வகைகள், மீன்கள், எலி வகைகள் உள்ளிட்டவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இறந்துவிடும். அவை எந்த உயிரினங்கள், எப்போது இறக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த உயிரினங்கள் தொடர்பான சுவாரசியமான தகவலை, கமெண்ட்ல சொல்லுங்க.
News November 2, 2025
ரஷ்மிகாவுக்கு கதையை பரிந்துரைத்த சமந்தா

ரஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘The Girlfriend’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் கதையை, தனது தோழியான நடிகை சமந்தாவிடம் படிக்க கொடுத்துள்ளார், இதன் இயக்குநர் ராகுல் ரவீந்திரன். அப்போது, இப்படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க ராகுல் திட்டமிட்டுள்ளார். ஆனால் சமந்தாவோ, இக்கதை தனக்கு பொருந்தாது, ரஷ்மிகாவை நடிக்க வையுங்கள் என கூறியுள்ளார். இதன் பிறகே ரஷ்மிகா படத்தில் கமிட்டாகியுள்ளார்.
News November 2, 2025
தமிழை பற்றி பேசும் தகுதி மோடிக்கே உண்டு: நயினார்

தமிழை பற்றி பேசும் தகுதி PM மோடி ஒருவருக்கு மட்டுமே உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஐநா சபைக்கு போனாலும் சரி, அயோத்திக்கு போனாலும் சரி தமிழை பற்றி மட்டுமே மோடி பேசுவதாகவும் கூறியுள்ளார். பிஹாரிகளை திமுக அரசு துன்புறுத்துவதாக மோடி கூறிய நிலையில், இது தமிழர்களை அவமதிக்கும் செயல் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.