News November 1, 2025
பழனி அருகே லாரி-கார் மோதல்: ஒருவர் பலி

பழனியை அடுத்த சாமிநாதபுரம் சோதனைச் சாவடி அருகே லாரி-கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். முன்பாக சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதாகப் கூறப்படுகிறது. பின்னால் வந்த கார் அதில் மோதியதில், கார் ஓட்டுநர் பசும்பொன்னையைச் சேர்ந்த கஜேந்திரமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 2, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் நேற்று (நவம்பர் 1) சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News November 1, 2025
திண்டுக்கல்: சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று (நவம்பர் 1) சமூக ஊடகங்கள் வழியாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சிக்னல் விதிகளை கடைபிடித்தல், ஜீப்ரா கிராசிங் பயன்படுத்தல், சாலையை கடக்கும் போது இருபுறமும் பார்வையிடுதல், ஓடாமல் பாதுகாப்பாக நடப்பது உள்ளிட்ட முக்கிய வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
News November 1, 2025
திண்டுக்கல் : PHONE தொலைந்து விட்டால் இத பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


