News November 14, 2025
நேருவின் பிறந்தநாளில் சறுக்கிய காங்கிரஸ்!

சுதந்திர இந்தியாவின் பெரும் அரசியல் ஆளுமையான இந்தியாவின் முதல் PM நேருவின் பிறந்தநாள் இன்று. ஆனால், அவரின் பெருமைகளை நினைவுகூரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இல்லை. இன்று வெளியாகி வரும் பிஹார் தேர்தல் முடிவில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் MGB கூட்டணி 39 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது, காங்., 4 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. நேரு பிறந்தநாள், அவருடைய கட்சிக்கு சோக நாளாக மாறியுள்ளது!
Similar News
News November 14, 2025
பிஹாரை கைப்பற்றிய மோடி அலை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக-ஜேடியுவின் NDA கூட்டணி 204 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மோடி அலை என்று கூறப்படுகிறது. மோடி எங்கெல்லாம் ரோடு ஷோ நடத்தினாரோ, எங்கெல்லாம் பேசினாரோ அங்கெல்லாம் பாஜக முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மோடி அலை எடுபடுமா?
News November 14, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகை காமினி கௌசல்(98) காலமானார். 1946-ல் NEECHA NAGAR படத்தின் மூலம் திரையுலகில் அவர் அறிமுகமானார். இந்தியாவில் இருந்து இந்த ஒரு படம் மட்டுமே கான் பட விழாவில் Palme d’Or விருது வென்றுள்ளது. திலீப் குமார் உள்பட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த காமினி, கடைசியாக லால் சிங் சத்தா படத்தில் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News November 14, 2025
11 மாவட்டங்களில் கனமழை அலர்ட்.. வருகிறது புயல் சின்னம்

வங்கக் கடலில் நவ.21-ல் புயல் சின்னம் உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இன்று தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியிலும், நவ.16-ல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நவ.17-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.


