News November 2, 2025

நெல்லை: பெட்ரோல்குண்டு வீசிய மேலும் 2 பேர் கைது

image

கடந்த சில நாட்களுக்கு முன்பு தச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட 6 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தருவையை சேர்ந்த பாலாஜி, உடையார்புரத்தை சேர்ந்த சூர்யா ஆகிய 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 3, 2025

மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (நவ.2) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News November 2, 2025

நெல்லை: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே; ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News November 2, 2025

நெல்லை – மந்திராலயம் சிறப்பு சுற்றுலா ரயில் அறிவிப்பு

image

நெல்லையிலிருந்து நவ.9 அன்று நாசிக், சீரடி, சிங்கனாப்பூர், பண்டரிபுரம், மந்திராலயம் ஆகிய இடங்களுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு “பாரத் கௌரவ்” சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலில் செல்பவர்கள் சுற்றுலா தலங்களை பார்வையிட தனி போக்குவரத்து வசதி, தென்னிந்திய உணவு, பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும். தற்போது இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது என பொது மேலாளர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!