News November 2, 2025
நீலகிரி: வாட்ஸ்அப்பில் சிலிண்டர் புக்கிங் எப்படி?

நீலகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின் மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 2, 2025
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருட்கள்: ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள், நவம்பர் மாதத்திற்கான பொருட்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 2, 2025
நீலகிரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 2, 2025
நீலகிரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!


