News November 2, 2025
நீலகிரி: பேருந்தில் மோதி விபத்து; வாலிபர் பலி!

நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சி, சேரம்பாடி பகுதியில் (நவ. 1) இரவு, கேரளா அரசுப் பேருந்துடன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பிரின்ஸ் என்ற இளைஞர் விபத்துக்குள்ளானார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மரணம் அடைந்ததாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து சேரம்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 2, 2025
நீலகிரி புத்தகத் திருவிழாவில் ஆட்சியர் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வரும் 4வது நீலகிரி புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எழுதிய சொல்லாத கதை என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
News November 2, 2025
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருட்கள்: ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள், நவம்பர் மாதத்திற்கான பொருட்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 2, 2025
நீலகிரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!