News November 12, 2025

நிலவுக்கு பந்தயம்: வெல்லப்போவது யார்?

image

1969, ஜூலை 20-ல், நிலவில் முதல் முதலாக கால் பதித்தனர் USA விண்வெளி வீரர்கள். அரை நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில், 2030-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம், சீனாவுக்கு முன் மீண்டும் நிலவில் கால் பதிக்க தயாராகி வருகிறது USA. ஆனால் USA-வின் முயற்சியில் தாமதங்கள் ஏற்பட்டு வருவதால், விண்வெளி பந்தயத்தில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News November 12, 2025

டெல்லி கார் வெடிப்பு: அறிக்கை வெளியானது

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், உயிரிழந்தவர்களின் நுரையீரல், குடல் உள்ளிட்ட உறுப்புகள் கார் வெடிப்பால் சிதைந்துள்ளன. மேலும், சிலரது உடல்களிலிருந்து சில உலோகத் துண்டுகளும் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், உயிரிழந்தவர்கள் வெடிப்பின் காரணமாக கடுமையான வலி மற்றும் வேதனையை அனுபவித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

News November 12, 2025

BREAKING: தமிழக அரசு அறிவிப்பு

image

மழைக்காலங்களில் கூடுதல் மின்வாரிய பணியாளர்களை பணியில் அமர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் முன் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், அதிக பாதிப்பு ஏற்படும் வட்டங்களில் ஒரு பிரிவுக்கு 4 பேரை பணியமர்த்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், தற்செயல் விடுப்பில் உள்ள பணியாளர்கள் விடுப்பை ரத்து செய்துவிட்டு பணிக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 12, 2025

நீங்களும் இப்படி ஏமாறலாம்.. உஷார் மக்களே!

image

டெக்னாலஜி வளர, வளர மோசடிகளும் அதிகரித்து கொண்டே போகின்றன. இது புது ரகம். உங்கள் நண்பரின் நண்பர் என ஒருவர் போன் செய்து பேசுவார். அப்போது 2nd call வரும். அது உங்கள் நண்பரின் அழைப்புதான், Attend செய்து, Call Merge செய்ய சொல்கின்றனர். அதை செய்தால், உங்கள் போனின் மொத்த கட்டுப்பாடும் அவர்களிடம் சென்று விடுகிறது. ஈசியாக, வங்கியின் OTP அழைப்பை, தெரிந்து கொண்டு மொத்த பணத்தையும் சுருட்டி விடுகின்றனர்.

error: Content is protected !!