News November 30, 2025
நாமக்கல்: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 சோதனை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். டிச.2ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News December 2, 2025
‘பசுமை சாம்பியன்’ விருதுபெற விண்ணப்பிக்கலாம்!

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்பட்டோருக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கான முன்மொழிவை மாவட்ட ஆட்சியரிடம் 2026 ஜன. 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
வேலகவுண்டம்பட்டியில் நேர்ந்த சோகம்!

வேலகவுண்டம்பட்டி அருகே மருக்கலாம்பட்டி, புத்தூர் கிழக்கைச் சேர்ந்த துரைசாமி (68) மனைவி ஜெயா (64) தம்பதியினர் மீன் கடை நடத்தி வந்தனர். கடந்த 30ம் தேதி இரவு வீட்டுக்குப் செல்லும்போது அதிவேக மோட்டார் சைக்கிள் ஜெயா மீது மோதி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். மேலும் வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 2, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரிகள் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் விலைப்புள்ளி பட்டியலை தயார் செய்து, www.msmeonline.tn.gov.in/twees விண்ணப்பிக்கலாம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


