News November 2, 2025
நாமக்கல் அருகே இளம்பெண் பலி!

நாமக்கல்: வையப்பமலை அடுத்துள்ள மரப்பரை தென்னமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த கோகிலா (35) நேற்று (நவ்.1) மதியம் 11 மணியளவில் தையல் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக அவரின் உடலை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலு,ம் இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (02.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
நாமக்கல் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளர் தேர்வு!

நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் யோகா பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். யோகாவில் இளங்கலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்ற தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் இன்று நவம்பர். 3 அன்று மாலை அசல் சான்றுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
நாமக்கல்லில் நவ.5-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

நாமக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அலுவலகங்களில் மாதந்தோறும் புதன்கிழமைகளில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, நாமக்கல் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை முகாமில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.


