News December 1, 2025
நாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் CPR: PM மோடி

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கும் முதல் ராஜ்ய சபா கூட்டம் என்பதால், அவருக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய PM, எளிய குடும்பத்தில் இருந்து வந்த CPR, நாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் என்று புகழ்ந்தார். கோவை குண்டுவெடிப்பில் CPR உயிர் தப்பியதை பற்றி குறிப்பிட்டு பேசிய PM, உங்களுடன் நீண்ட நாள்களாக பணியாற்றி வருவதில் மகிழ்ச்சி என்று கூறினார்.
Similar News
News December 2, 2025
நீலகிரி: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

நீலகிரி மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 2, 2025
கரூர் துயர வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில்(SC) தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக அரசு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு(SIT) விசாரணை தொடர அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. SC உத்தரவின்பேரில் CBI அதிகாரிகள் ஒரு மாதமாக கரூரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 2, 2025
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இன்று இரவு சென்னை – பாண்டிச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


