News November 2, 2025
நாகை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

நாகை மக்களே, விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News November 3, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (நவ.02 ) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
நாகை: 1,00,162 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

நாகப்பட்டினம், 117 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கே.எம்.எஸ் 2025-2026 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் (03.09.2025) முதல் (01.11.2025) வரை 1,00,162 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய தினம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 3,297 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மாவட்ட முழுவதும் கொள்முதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
நாகை: பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை

நாகப்பட்டினம் மெய்கண்ட மூர்த்தி சுவாமி திருக்கோயிலின் மகா கும்பாபிசேகம் நாளை 3ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களை சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும், நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 8ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


