News November 12, 2025

தேனி: வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

image

பெரியகுளம், டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (60). இவா் தேனி அருகே மதுராபுரி பகுதியில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்றாா். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் காணப்படாத வாகனம் பாலமுருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. படுகாயமடைந்த பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (நவ.11) உயிரிழந்தாா். இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு.

Similar News

News November 12, 2025

தேனி: அண்ணா பல்கலை.,யில் வேலை., உடனே APPLY

image

தேனி மக்களே, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Accounts Executive / Data Entry Operator பல்வேறு பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ. 14க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் எழுத்து தேர்வு கிடையாது. சம்பளம் ரூ.24,000 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த தகவலை ஷேர் செய்யுங்க.

News November 12, 2025

தேனி: நிதி நிறுவனத்தில் ரூ.16.05 லட்சம் மோசடி

image

கம்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அதன் மேலாளர் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். நிதி நிறுவனத்தின் வங்கி வரவு, செலவுகளை ஆய்வு செய்தபோது 238 வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு செலுத்திய ரூ.16,05,366 ஐ அங்கு பணிபுரியும் களப்பணியாளர்கள் சம்பத்குமார் (34), பிரவீனா (29) ஆகியோர் கையாடல் செய்தது தெரிந்தது. இதுகுறித்து இருவர் மீதும் போலீசார் நேற்று (நவ.11) வழக்கு பதிவு.

News November 12, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (11.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!