News November 28, 2025
தேனி உதவி இயக்குநர்கள் பணி மாறுதல்

தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) இருந்த எஸ்.அண்ணாதுரை தேனி மாவட்ட உதவி இயக்குநர் (தணிக்கை) பணிக்கும் அந்தப் பணியில் இருந்த சி.கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) பணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மு.முருகையா மாற்றப்பட்டு, மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜ.உம்முள் ஜாமியா நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 2, 2025
தேனி : 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்<
News December 2, 2025
தேனியில் BSF வீரா் தூக்கிட்டு தற்கொலை

சின்னமனூரை சேர்ந்தவர் பொன்சங்கா் (26) மத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் கடந்த 4 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தாா். விடுமுறைக்காக சின்னமனூருக்கு வந்த இவர் நேற்று முன்தினம் தூங்க செல்வதாக கூறிச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா் கதவை உடைத்து பாா்த்தபோது பொன்சங்கா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து சின்னமனூா் போலீசார் விசாரணை.
News December 2, 2025
தேனி: அரசுக்கு கோரிக்கை வைத்த முன்னாள் முதல்வர்

பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். மேலும் விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து கால அவகாசத்தை டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


